
ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய, ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க அனைத்து ஜனாதிபதி அலுவலக பிரதானிகளையும் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பல 35 முறைப்பாடுகளுக்கு ஒரு மணித்தியாலத்திற்குள் தீர்வுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நியமனம் செய்வதற்கு முன்னரும் எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைத்துள்ளது.
அதற்கமைய, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை ஒவ்வொரு வாரமும் நடைமுறைப்படுத்தவும் வெற்றியடையும் பட்சத்தில் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இந்த முறையை அறிமுகப்படுத்த சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார்.