கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை – பூம்புகார் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (47வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்பொழுது திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.