
எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அமைக்கப்பட்ட எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ், உதவி பணிப்பாளர் திரு சசீபன், IOM நிறுவனத்தின் கொழும்பு அலுவலக பிரதிநிதி கயானி, IOM நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு ஜெமீன் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.