
அண்மைக்காலமாக கட்டைக்காடு மீனவர்கள் கடல்வளத்தை அழித்துவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்தும் 400 இற்கும் மேற்பட்ட படகுகள் சுருக்குவலை தொழிலுக்காக ஆழக்கடலுக்கு விரைந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
நீரியல்வளத்துறையினரால் அடிக்கடி எச்சரிக்கப்பட்ட போதும் அப்பகுதி மீனவர்கள் குறித்த தொழிலை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்கின்றார்கள்.
இதனால் சிறு தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இன்றி மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக குறித்த சட்டவிரோத தொழிலுக்கு முடிவு கட்டத்தவறிய கடற்றொழில் அமைச்சரும் கட்டைக்காடு மீனவ சங்கமுமே இதற்கு பொறுப்பென அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனினும் சில நாட்களுக்கு முன்பு சுருக்குவலை தொழிலில் ஈடுபடவேண்டாம் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை குறுப்பிட தக்கது