மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுடைய தீர்க்கப்படாத விடையங்கள் அதிகளவில் இருக்கின்றது. திட்டமிடவேண்டிய நிறைய தீர்மானங்கள் இருக்கின்றது இவையொல்லாம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் விவாதிக்காமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து சின்னப்பிள்ளைதனமாக சண்டையிட்டு மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிளை மோகன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
செங்கலடியிலுள்ள பிறிதியன் திரையரங்கு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) விசே ஊடக சந்திப்பில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் ஆகிய இருவரும் 21ம் 22 ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஆற்றி உரை நடந்து கொண்டவிதம் மட்டக்களப்பு மாவட்ட மக்களை அதிர்த்திக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மக்களை தலைகுனிய வைத்துள்ளது
இவர்களுடைய வெற்றிக்கு கடந்த பொது தேர்தலில் தமிழ் உணர்வாளர் அமைப்பு ஆகிய நாங்கள் மிகவும் பாடுபட்டோம். மாவட்டத்துக்கு 5 தமிழ் பிரதிநிதித்துவம் வரவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் தமிழ் மக்கள் விடுதலைபு; புலிகள் கட்சிக்கு வாக்களிக்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைபு; புலிகள் கட்சிக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம் அந்த வகையில் இவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபட்டவர்கள்.
அந்தவகையில் உங்களது செயற்பாட்டிற்கு மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே தமிழர்களாகிய நாங்கள் ஒருமித்த பாதையிலே பயணிக்கவேண்டிய காலத்தின் கட்டாய தேவை இருக்கின்றது அதனைவிடுத்து இவ்வாறு சின்னப்பிள்ளைதனமாக பாராளுமன்றத்தில் சண்டையிடுவது மாவட்டமக்களை தலைகுனியவைத்துள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் 44 ஏக்கரை குத்தகைக்கு பெற்றிருக்கின்றார். இதில் என்ன பிரச்சனை இருக்கின்றது? அரச காணியை யாரும் குத்தகைக்கு பெறலாம் நாடாளுமன்ற உறப்பினராக இருக்கலாம் பாமர மக்களாக இருக்கலாம் அதில் எந்தவிதமான பிரச்சகை;கும் இடமில்லை.
இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கனடாவிற்கு ஆளை அனுப்பினார் கனடாவுக்கு சாணக்கியன் ஆளை அனுப்பினால் பிள்ளையானுக்கு என்னகுறை வந்துவிட்டது எந்த பிரச்சனையும் இல்லை இதனை பாராளுமன்றத்தில் விவாதிப்பது பெரிய வெக்ககேடானது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏராளமான காணிகள் பல தரப்பாலும் பறிபோய்க் கொண்டிருக்கின்றது இந்த நிலையில் ஒருமித்து யாராவது தமிழர்கள் இந்த காணிகளை தக்கவைத்து கொள்ளவேண்டிய காலத்தின் கட்டாய தேவை இருக்கின்றது என்பதை சகலரும் உணர்ந்து கொள்ளுங்கள்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் பாமரமக்களாக இருக்கலாம் அரசாங்கத்தின் காணிகளை குத்தகைக்கு பெறுவதற்கு சகலருக்கும் உரிமை இருக்கின்றது என்பதை எல்லோரும் விளங்கி கொள்ளுங்கள்.
எனவே நிலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழர்களுக்கும் இருக்கின்றது இதனையெல்லாம் பெரிய விடையமாக தூக்கிப்பிடிக்க வேண்டாம். அதேவோன்று சாணக்கியன் வெளிநாட்டுக்கு ஆளை அனுப்பியிருந்தால் வேறு ஏதும் செய்திருந்தால் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டிய விடயம் இல்லை இதை உங்கள் வீட்டுகளின் வாசலில் மேடை அமைத்து விவாதித்துக் கொள்ளுங்கள்.
மாவட்டத்தில் எங்களுடைய தீர்க்கப்படாத விடையங்கள் அதிகளவில் இருக்கின்றது திட்டமிடவேணடிய நிறைய தீர்மானங்கள் இருக்கின்றது இவையொல்லாம் நாடாளுமன்றத்தில் பேசாமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து இந்த மாவட்ட மக்களின் மரியாதையை இழந்திருக்கின்றீர்கள்
பல்கலைக்களக உபவேந்தவர் இங்கு தான் கொiலை நடந்துள்ளது வேற்று கிரகவாசிகள் வந்து கொலை செய்யவில்லை இதனை அனைவரும் அறிந்த விடையம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்யவேண்டும் என்றார் அவ்வாறான தேவையிருந்தால் அதை செய்யது உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை
நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் தம்பியார் ஆள்கடத்துவதாக ஒரு செய்தியை நான் வாசித்தேன் இந்த நாட்டில் புலனாய்வுதுறை குற்ற விசாரணைப்பிரிவு என பல பாதுகாப்பு பிரிவுகள் இருக்கின்றது அதனை விசாரித்து உரியவர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்க வேண்டியது கட்டாயம்.
எனவே இனிவரும் காலங்களில் இந்த அரசியல் தலைவர்கள் ஒருமித்த பாதையில் ஒரு திட்டமிடலை வகுத்து எங்கள் மாவட்டத்துக்கு என்ன தேவை இருக்கின்றது நாங்கள் இதை எப்படிச் செய்யப் போகின்றோம.; என்ற ஒருமித்த வேலைத்திட்டத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு ஒருமித்து வாழவேண்டும் என்ற கோட்பாட்டை தமிழ்உணர்வாளர் அமைப்பு முன்வைக்கின்றோம்.
அதேவேளை தமிழரே தமிழராய்யுவோம் அனைத்து தமிழர்களும் ஒருங்கினைந்த பாதையில் பயணம் செய்யவேண்டிய காலத்தின் கட்டாயம் இருக்கின்றது இதனை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் இந்த மாதிரி சின்னப்பிள்ளைதனமாக சண்டைகளை நாடாளமன்றம் கொண்டு சென்று மாவட்ட மக்களை அசிங்கப்படுத்தாமல் மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைவரும் ஒன்றினைய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.