
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நேற்று(30.11.2022) இடம்பெற்றது.
கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் 162 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, 314 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 67 ஓட்டங்களையும் சரித் அசலங்கா ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஷித் கான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.