
எதிர்வரும் 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களின் கீழ் மின்கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மின் கட்டண உயர்வை அறிவிக்கும் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவால் வழங்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், அமைச்சரவை அமைச்சர் தனது ஓய்வு நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்று தெரிவித்த அவர், நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது எனவும் அதன்படி செயற்பட வேண்டும் என்றார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எந்த அறிவிப்புகளையும் ஆணைக்குழு விடுக்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.