
வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்ச்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்பாதையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிக அவதானமாகவும் வேக கட்டுப்பாடுகளும் செல்லுமாறு பொலிஸார் அறிவித்தல் எடுத்துள்ளனர்.
