
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதுவர் ஜூலி சுங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய நால்வரே அமெரிக்கத் தூதுவரோடு கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது என்று இதில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.