
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் மாணவ பாராளுமன்ற முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மறியா தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலய சமூக விஞ்ஞான பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி. மரியநாயகம் மேரி தெரேசா அவர்களும் சிறப்பு விருந்தினராக அச்சுவேலி மத்திய கல்லூரி ஆசிரியர் ஜெ.ஜெயதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.