வீதியில் ஓட்டப் பந்தயம் நடத்தும் பேருந்து சாரதிகள் தொடர்பாக முறைப்பாடு தொிவிப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தற்போது 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு புகார் செய்யலாம். சட்டத்தை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
என தேசிய போக்குவரத்து ஆணையத்தின் (NTC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் தொடர்பில் மக்கள் புகார் அளிக்க 24 மணி நேரமும் ஹொட்லைன் வசதி உள்ளது.
புகார் செய்ய விரும்புவோர் இப்போது தங்கள் குறைகளை அனுப்பலாம் மற்றும் NTC பயணிகள் போக்குவரத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கலாம்.
“பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்க் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எனவே, மக்களின் பாதுகாப்பிற்கு சவால்விடும் எதற்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.