
ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்புச் சபை தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 வருடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்புச் சபையின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இந்தியா தலைவராக இருந்தது. இந்தநிலையில், நடப்பு டிசம்பர் மாதத்துக்கு இந்தியாவிற்கு தலைமைப்பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இந்தியா தலைவராக இருக்கும் இந்த மாதத்தில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் ஐ.நா.வில் நடக்கின்றன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்குத் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.