2022 க்கான உயர்தர பரீட்சை – கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், அக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் நேற்று (01) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டணம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பில் நெகிழ்வுத்தன்மை கடைபிடிக்கப்படுவதன் அவசியத்தை அமைச்சரவை மற்றும் மின்சார சபையிடம் முன்வைக்கயிருப்பதாகவும் கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, புதிய ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், வருட இறுதியில் ஏற்படவிருக்கும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews