
வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது மின்னஞ்சல் மூலமாகவே அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏதேனும் மேன்முறையீடு இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.