
யாழ்ப்பாணம் வடமராட்சி எல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் துவிச்சக்கர வண்டிகள் இரண்டு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த துவிச்சக்கர வண்டிகள் இரண்டும் வவுனியா இந்துக்கல்லூரியில் தரம் – 5 இல் கல்வி கற்கும் வவுனியா கோவிற்குளம் பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களிற்கே செல்வச் சந்நிதியான் ஆச்சிரம குருமுதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

