
துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்காலத்தில் மேலும் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.