இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி 41,678 மெட்ரிக் தொன் MOP உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று (02) வந்ததுள்ளது.
உரத் தொகையை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, மற்றுமொரு கப்பலும் 16,000 மெட்ரிக் தொன் யூரியாவுடன் இன்று காலை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.