
கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக 65வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 10 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 பேருக்கே இவ்வாறு மன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் எவ்வித காரணமுமின்றி பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


