
அமரர் தேவராசா லக்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவை முன்னிட்டு கரவெட்டி நுணுவில் குளக்கோட்டு விநாயகர் ஆலய இராமையா மட அன்னதான சபையும், ஞானம்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்களும் இணைந்து இலங்கை செஞ்சிலுவை சங்க கரவெட்டி கிளை அனுசரணையில் இரத்ததான முகாம் ஒன்றை இன்று காலை கழக மண்டபத்தில் நடாத்தியுள்ளனர்.

குறித்த கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி பிறேமதாசன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதில்36 கழக உறுப்பினர்கள் இரத்தம் தானம் செய்துள்ளனர்.
இரத்தத்தை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை இரத்த வங்கி இரத்தத்தை பெற்றுக்கொண்டனர்.



