வவுனியா மெனிக்பாமிலுள்ள புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டம்..!

வவுனியா மெனிக்பாமிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகிருந்தார். இந்த பாதுகாப்பற்ற கடவையில் நான்கு, ஐந்து விபத்து சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ள. அண்மையில் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தது. மெனிக்பாம் கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் இந்தக் கடவையினூடாக பாதுகாப்பற்ற போக்குவரத்தை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புகையிரத கடவையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபா மாத்திரமே ஊதியமாக வழங்கப்படுவதால் யாரும் குறித்த பணிக்கு செல்ல விரும்புவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். போராட்ட இடத்திற்கு வருகை தந்த பறயனாளங்குளம் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி குறித்த கடவையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து மூவர் விண்ணப்பித்துள்ளாதாகவும், அதற்குரிய நடவடிக்கையை மிக விரைவில் எடுப்பதாகவும், சமிக்ஞை விளக்கினை பொருத்துவதற்கு புகையிரத திணைக்களத்திற்கு தாம் சிபார்சு செய்வதாகவும், மக்களையும் எழுத்து மூலமான கோரிக்கை கடிதத்தை புகையிரத திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews