பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு நகரபிதா இருதயதாஸ் தலமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்க்கு ஏக மனதாக அங்கீகரிக்குமாறு தவிசாளரால் கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடாத்தாப்பட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோரிக்கை விடுத்த நிலையில் நகர சபை செயலாளரால் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 6 பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும்,
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவருமாக வ ஆக 8 பேர் எதிராக வாக்களித்தனர்.
ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும், தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஒருவர், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், ஈழ மக்கள் ஜநாயக கட்சி உறுப்பினர் ஒருவருமாக மொத்தம் ஏழு பேரும் வாக்களித்தனர். இதன் அடிப்படையில் நகர சபை செயலாளர் வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மீள திருத்திய பாதீட்டை கொண்டுவரவிருப்பதாக அறிவித்து தவிசாளர் கூட்டத்தை நிறைவு செய்தார்.