
இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பொறுப்பை மீண்டும் இந்திய தரப்பின் பக்கம் திருப்பி விடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகிறார் என இந்திய அரசியல் ஆய்வாளர் என். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன செய்ததைப் போன்று அவருடைய மருமகனான ரணிலும் இந்தியாவுக்கு இந்தப் பொறுப்பை மாற்ற முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், இந்திய புலனாய்வுப்பிரிவின் தலைவர்,கோயல் இலங்கைக்கு ராடார் பயணம் சென்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்சவையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏனைய தமிழ் குழுக்களும் முன் நிபந்தனைகள் இன்றி, சூழ்நிலையில் முடிந்தவரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்கத்துடன் மேசைக்குத் திரும்பவேண்டும் என்று பசில் ராஜபக்ச கேட்டிருந்தார்.
இந்நிலையில் மறைந்த ஜெயவர்த்தனவைப் போலவே, அவர் அறியப்பட்ட ‘கபடமான’ விக்ரமசிங்க, பந்தை இந்தியாவின் பக்கம் மீண்டும் வைக்கத் தயாராகி வருவதாகத் தெரிகின்றது.
ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்காமை மற்றும் அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்காமை குறித்தும் அரசியல் ஆய்வாளர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.