நிலைகுலையும் உக்ரைன்..! கடும் குளிருக்கு மத்தியில் ரஷ்யா புதிய அடி

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய அலை ஏவுகணை தாக்குதலை இன்று ஆரம்பித்துள்ளது.

ரஷ்யா உக்ரைனிய எரிசக்தி உட்கட்டமைப்பை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிவருவதால் ஏற்கனவே அதன் எரிசக்தி நிலைமை கடினமாக உள்ள நிலையில் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

உக்ரைனின் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி உட்கட்டமைப்புகளை கடந்த சிலவாரங்களாக குறிவைத்து தாக்கிவரும் ரஷ்யா இன்று உக்ரைனை நோக்கி புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று பகல் ஏவுகணைகளின் முதல் அலை தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனிய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறினார்.

இந்தத் தாக்குதல்களை தடுக்க உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் இயங்கினாலும் இதுவரை எத்தனை ஏவகணைகள் சுட்டு வீழத்தபட்டன என்பது குறித்து எந்தத் தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

ஒடேசா, பொல்டவா மற்றும் வின்னிட்சியா ஆகிய பிராந்தியங்களில் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனிய தலைநகர் கியேவை சுற்றி வான் பாதுகாப்பு அமைப்புகள் வேலை செய்தாலும் குடிமகக்களை தத்தமது வதிவிடங்களில் தங்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைனிய சக்திவள நெருக்கடி தற்போது கடினமான நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக உக்ரைனின் தேசிய நிறுவனமான உக்ரைனெர்கோ இன்று அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் இந்தவாரம் கடும் குளிர் நிலவுள்ள நிலையில், உக்ரைனில் எற்கனவே வெப்பநிலை கடுமையாக வீழ்ச்சியுற்றுள்ளது.

இன்று அங்கு உறைநிலைக்கு கீழ் மறை 7 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews