
யாழ்.தெல்லிப்பழையில் சுமார் 2 ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
வரிகள் செலுத்தப்படாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் டி. தியான் இந்திக்க சில்வா தலைமையிலான குழுவினரே
கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் , மேலதிக விசாரணைகளை அடுத்து சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.