
உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் தொடர்பில் விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைகள் ஆணையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மதிப்பீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்போர், குறித்த திகதிக்கு முன்னதாக இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.