
பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால், முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழி வகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.