விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவான தீர்வு அவசியம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காண்பது மிகவும் அவசியமானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயிர் விதை விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு காணப்படுகிறது. காலநிலை, மண்வளத்திற்கு உகந்த வகையில்; பயிர் விதைகள் சந்தையில் விநியோகிக்கப்படுவதில்லை.

நாட்டின் உணவு பாதுகாப்பு எந்த நிலையில் காணப்படுகிறது என்பதை பற்றி புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது. உணவு பாதுகாப்புக்கு உரிய சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. உணவு பாதுகாப்புக்கு விரைவான தீர்வு எடுக்காவிட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விலங்குகளால் பயிர்செய்iகைக்கு ஏற்படும் விளைவுகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாட்டில் உர தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது. சந்தையில் உரம் ஒவ்வொரு விலையில் காணப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நெற்பயிர்ச்செய்கை உற்பத்திக்கான செலவுக்கும், நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயிக்கும் விலைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு காணப்படுகிறது. எனவே விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews