ஐக்கிய மக்கள் சக்தியானது இலங்கையின் கல்வித்துறையை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் – எதிர்க் கட்சித் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியானது இலங்கையின் கல்வித்துறையை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சகல விடயங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று மொழி அறிவை விருத்திசெய்வதற்கான ஏற்பாடுகள் மாணவர்களுக்கு செய்துகொடுக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக் குறித்த அவதானம் செலுத்தப்படும்.

அதிகார பலம் நிதி பலம் கூடியவர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் வரபிரசாதங்கள் நாட்டிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் கிடைப்பதில்லை.

43 இலட்சம் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

எதிர்க் கட்சியானது, பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் போது சஜித் பிரேமதாஸவுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்க மட்டுமே தெரியும் என்றும் அதற்கு மேல் எதுவும் தெரியாது என இந்த சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் இலங்கையின் 74 வருட அரசியல் வரலாற்றில் எதிர்க் கட்சி ஆற்றிய பாரம்பரிய வகிபாகத்திற்கு அப்பால் தற்போதைய எதிர்க் கட்சி வேறுபட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

கல்வி சார்ந்த அனுகலில் பாராபட்சம் நிலவக்கூடாது. எனவே கேளி செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஆட்சியதிகாரமின்றி சேவை செய்ய சவால் விடுக்கின்றோம்.

பாடசாலைகளுக்கு 42 பஸ்கள் பரோபகாரிகளின் உதவியுடன் வழங்கப்பட்டது. அவற்றிற்கு அரசாங்க நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

நாட்டின் உயிர்நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews