கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற யுவதியின் தங்க நகையை பறித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுவதியின் தங்க நகையை பறிக்கும் போது குறித்த யுவதி புகைப்படம் எடுத்ததால் இரண்டு மணித்தியாலங்களில் கொள்ளையர்கள் இருவர் சிக்கியுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற யுவதி ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களிலேயே யுவதி வழங்கிய புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு கொள்ளையர்களை கைது செய்யமறு ஹோமாகம பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணிப்புரை விடுத்துள்ளர்
அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, 10 கிராம் ஹெரோயின், கொடகம அரச வங்கியின் ரசீது மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் போது, திருடப்பட்ட நகையை அடகு வைத்து பெறப்பட்ட 90,000 ரூபா பணத்தை போதைப்பொருள் கொள்வனவு செய்ய பயன்படுத்தியதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் 24 வயதுடைய கிரிவத்துடுவ ‘ஆரா’ அல்லது மதுசாந்த என்ற போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளவராகும்.
மற்றைய சந்தேக நபர் 26 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் அதே பகுதியில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.