
இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்னைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப்பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேசம் மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கு உட்பட தேசிய ரீதியில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சு மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, இதைக் கவனத்தில்கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் செயல்பட வேண்டும். சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழ்க் கட்சிகளிடம் மீளவும் கேட்டுக்கொள்கின்றேன் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.