பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்தல் மற்றும் பாடசாலைக்கு சீராக வருகின்ற பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற செயற்றிட்டங்களுக்கு உதவ முன்வந்தது சிறிலங்கா டெலிகொம்

தனது தனிப்பட்ட விடுமுறைக்காக மூதூர் கிழக்கிற்கு வருகை தந்திருந்த Srilanka telecom நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.லலித் செனவிரட்ண அவர்கள் பாட்டாளிபுரத்தில் பாடசாலைப் பருவப் பிள்ளைகள் பாடசாலை செல்லாது வேறு வேலைகளில் ஈடுபட்டதை அவதானித்திருந்தார். அதன் பிரகாரம் தான் பணிக்குத் திரும்பியதும் தனது நிறுவனத்தின் ஊடாக இப்பிரதேசப் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு வழங்கக் கூடிய உதவிகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் .அதற்கமைய நேற்றைய தினம் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.இதன் போது மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளர் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் போன்றோருடன் Srilanka telecom நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பிள்ளைகளின் இடைவிலகலைத் தவிர்த்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகளின் தரத்தைப் பாதுகாத்து அவர்களும் இடைவிலகாது பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் ஒன்றினை வகுத்து அதனூடாக எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடினர்.இதன்போதே பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான உதவியினை நல்க Srilanka telecom நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணக்கப்பாட்டை வெளியிட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews