மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் வீரமாநகர்க் கிராமத்துக்குள் இன்று அதிகாலை 3.00மணியளவில் புகுந்த காட்டு யானைகள் பயன் தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதுடன் வறிய மக்கள் தமது உணவுத் தேவைகளுக்காக செய்கைபண்ணிய கச்சான் சோளம் மரவள்ளி போன்ற செய்கைகளையும் அழித்துள்ளன.சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட குளிர் மற்றும் தொடர் மழைகாரணமாக மக்கள் தமது குடிசைகளுக்குள் முடங்கியிருந்த நிலையில் கிராமத்துக்குள் புகுந்த யானைகள் அவர்களின் பயிர்ச் செய்கைகளை நாசம் செய்துள்ளதுடன் தென்னை மரங்ளையும் துவம்சம் செய்துள்ளன.இப்பிரதேச மக்களால் நீண்டகாலமாக யானை வேலியினை அமைத்துத் தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் அரசாங்கமும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் அதனைக் கவனத்திலெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.