அரிசி இறக்குமதிக்கு தடை – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரிசி இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற வர்த்தமானியை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மகா பருவத்தில் நெற்செய்கை தோல்வியடைந்துள்ள நிலையில் இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற கணிப்பு காரணமாக இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய நுகர்வோர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இவ்வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 675,288 மெட்ரிக் தொன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரிசியை இறக்குமதி செய்வதற்கு 73,627 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த யால பருவத்தில் அதிகமான நெல் அறுவடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருட மகா பருவத்திலும் 8 இலட்சம் ஹெக்டேயர் மற்றும் 6,75,600 ஹெக்டேரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள விவசாயிகள் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 2023ஆம் ஆண்டு எமது நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews