
அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் தகவல்களையும், சேத மதிப்பீடுகளையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வியமைச்சுக் கோரியுள்ளது. சேதமடைந்த பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், சேதங்களைச் சீர் செய்து கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர துரித நடடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.