
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம் இன்று இடம் பெற்றுள்ளது..
யாழ் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் புனித கப்பலேந்தி மாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடத்தியுள்ளனர்.
அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் காலை 10:00 மணி தொடக்கம் 02.00 வரை இடம் பெற்ற நிகழ்வில் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் குருதிக் கொடையளித்தனர்.
குருதியினை யாழ் போதனா வைத்திய சாலை குருதி வங்கி பிரிவினர் பெற்றுக் கொண்டனர்