அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை மகாஓயா நகர்பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மகாஓயா பொலிசார் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான நேற்று மாலை மகாஓயா இலங்கைவங்கிக்கு அருகில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது பிபிலையில் இருந்து கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக மகாஓயாவிற்கு முச்சக்கரவண்டி ஒன்றில்; கடத்தி வந்துள்ள நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்து முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனையிட்டபோது அதில் கடத்திக் கொண்டுவரப்பட்ட 5 கஜமுத்துக்களுடன் 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பிபிலையைச் சேர்ந்த 53,34,36,வயதுடையவர்கள் எனவும் இவர்களையும் மீட்கப்பட்ட கஜமுத்துக்கள், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும், மகாஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.