நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

மோசடி நடவடிக்கைகள்  குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமாக செயற்படுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு தெரிவித்து பாரிய மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற மோசடிகள் மூலம் தனிப்பட்டவர்களிடமிருந்து பண மோசடி செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் மிக பாரியளவில் அதிகரித்துள்ளது.

எனவே, முறையான சரிபார்த்தலின்றி  குறித்த தகவல்களின் அடிப்படையில் இனந்தெரியாத தரப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட வேண்டாம் என்றும் அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை வலியுறுத்துகின்றது.

மாறாக இதுபோன்ற குறுஞ்செய்திகள் , மின்னஞ்சல் செய்திகள் கிடைக்கப் பெற்றால், நிதியியல் உளவறிதல் பிரிவின் 011-2477125011-2477509 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளதாக செய்திகளின் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews