ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கான அழைப்பு ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர் சி.ஆ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காரணம் சர்வதேச ரீதியாக தொடர்சியாக வரும் அழுத்தம் தான் பேச்சுக்கான அழைப்பு என்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் ஸ்திரமான அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குதல், இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைத்தல், புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டை உள்வாங்குதல் போன்ற மூன்றுமெஎ ஆகும்.
இம் மூன்றையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் இனப் பிரசினைக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு காண வேண்டும். அல்லது தீர்வு காணப்பட்டது போன்ற தோற்ப்பாட்டை காட்ட வேண்டிய தேவைப்பாடுள்ளது.
மேற்குலக நாடுகள் தாங்கள் வழங்கும் உதவியை இனப் பிரசினை தீர்வோடு தொடர்பு படுத்தியுள்ளது.
இனப் பிரசினைக்குத் தீர்வு கண்டால் மாத்திரமே தம்மால் தொடர்ந்தும் உதவி வழங்க முடியும் என்று கூறியுள்ளது.
அரசு இனபிரசினை விடயத்தில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடம் தான் பேசியிருக்க வேண்டும், ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துள்ளது. இது ஒரு சர்வகட்சி மாநாடு என்றே கூறிக் கொள்ளலாம். இது காலத்தைக் கடத்துவதற்காகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நீர்த்துப் போகச் செய்வதற்காகவும் தான் சர்வகட்சி மாநாடுகளையும், தெரிவுக்குழுக்களையும் உருவாக்குவது என்பதை நாம் வரலாற்றில் கண்ட அனுபவம்.
இம் முறையும் அவ்வாறு முயற்சி மேற்கொள்ளப்படிகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. ஜனாதிபதி தனக்குள்ள பொறுப்பை அனைவரது தலையிலும் கட்டிவிடப் பார்க்கிறார். இந்த சர்வகட்சி மாநாட்டில் எல்லாக் கட்சிகளும் வரப்போகிறது. விமல் வீரவன்சவின் கட்சி, உதயகம்பன்பில போன்ற கடும் போக்கான இனவாதிகளும், தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியல் கட்சிகளான ஈ.பி.டீ.பி, பிள்ளையான் போன்ற கட்சிகளும் கலந்து கொள்ளும் இந்த இடத்தில் தமிழ்த் தரப்பு என்னத்தைப் பேசப் போகிறது. தமது கருத்துக்களை எவ்வாறு உறுதியாக முன்வைக்கலாம் என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்த் தரப்புக்கள் பேச ஆரம்பிக்கும் போதே எல்லோரும் கடுமையாக எதிர்கின்ற நிலை தான் காணப்படப் போகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.
1) காணி ஆக்கிரமிப்புக்களை உடனடியாக நிறுத்துதல் வேண்டும்.
2) இது வரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பகிர்வுகளை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலையும் நடாத்த வேண்டும்.
3) சமஷ்டி அதிகாரப் பகிர்வை நோக்கி முன்நகர்த்திச் செல்ல வேண்டும்.
இதில் முன்னுள்ள இரண்டு கோரிக்கைகளையும் நல்லெண்ண அடிப்படையில் நடத்திக் காட்ட வேண்டும். அவ்வாறு நடாத்தி நல்லெண்ணத்தை காட்டினால் மட்டுமே தெடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சமஷ்டி தீர்வுக்குத் தயார் என்றால் மாத்திரமே பேச்சு வாத்தையில் எம்மால்க் கலந்து கொள்ளமுடியும். இல்லாது போனால் எம்மால் பேச்சில் கலந்து கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இப் பேச்சு வார்த்தை தமிழ் மக்களுக்கு எவ்வளவு தூரம் சாதகமாக அமையும் என்கிற சந்தேகம் எழுகிறது.
பேச்சு வார்த்தைக்குச் செல்லாவிட்டால் சர்வதேச ரீதியில் ரணில் விக்கி்ரமசிங்க தமிழ் மக்களுக்கு எதிராக குற்றத்தை சுமத்திவிட முடியும். நான் அழைத்தேன் அவர்கள் வரவில்லை என சுலபமாக கூறிவிட முடியும். ஆகவே பேச்சுக்குச் செல்ல வேண்டிய தேவையும் தமிழ்த் தரப்புக்கு உண்டு. அத்துடன் ரணிலின் வலையில் மாட்டுப்படாமல் இருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
இது தொடர்பான உரையாடலை தமிழ் சூழலில் நடாத்தியிருக்க வேண்டும், துரதிஷ்டவசமாக தமிழ்ச் சூழலில் அவ்வாறான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கவில்லை. கட்சிகள் தன்னும் அவ்வாறான கலந்துரையாடல்களை தமக்குள்ளேயாவது வலுவான செய்தார்களா என்று கூட கூறிவிடமுடியாது.
தமிழ் அரசியலில் தொடர்சியாக நடைபெற்று வரும் துரதிஷ்டவசமாக நிலமை. இந்த நிலமையில்த் தான் இப் பேச்சுவார்த்தை தொடர்பில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலமையில் நாம் உள்ளோம்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சியே வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாகஇருக்கின்றார்கள்.
அதில் இன்று தமிழ் தேசிய கட்சிகளாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிலும் சரி மூன்றும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி தீர்வையே தான் வைத்துள்ளார்கள்.
அதே வேளை தமிழ் மக்களிடமும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியையே அனேகமானவர் விரும்பி நிக்கின்றனர்.
ஆனால் தென்னிலங்கையில் அந்தச் சூழல் இல்லை. சஜித் பிரேமதாஷவிடம் ஒற்றையாட்சிக்கு உட்ப்பட்ட 13ஐ விட வேறேதுவும் இல்லை. அதற்கு மேல் செல்ல முடியாது என்று கூறிவிட்டார். மஹிந்த தரப்பு 13 பிளஸ் எனக் கூறுகிறது, பிளஸ் என்றால் என்ன என்று தெரியாது.
தென்னிலங்கை அரசியல் வாதியான டிலான் பெரேரா கூறுகிறார் 13 பிளஸ் இரண்டாவது சபையை உருவாக்கலாம் என்கிறார். இரண்டாவது சபையை உருவாக்கிவிடுவதால் தமிழ் மக்களுக்கு பெரிதாக ஏதும் நடந்துவிட முடியாது.
மறு பக்கத்தில் இந்தியாவும் 13ஐ நடைமுறைப்படுத்தச் சொல்லி அழுத்தங்களைக் குடுக்கலாம். ஆனால் தற்போது அறிகிறோம் 13ஐ விடவும் அதிகமாக குடுக்க வேண்டும் என இந்தியா கருதுகிறது.
13ஐ விட இந்தியா தாண்டிச் செல்லவில்லை என கருதினால் 13ஐ சமஷ்டியாக மாற்றுங்கள் என நாம் கோரிக்கையை முன் வைக்கிறது பெருத்தமாக இருக்கும். 13ஐ சமிஷ்டிக்கான திருத்தமாக மாற்ற வேண்டும் என்றால், 13ல் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. 13கு வெளியில் அரசியல் யாப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது.
அரசியல் யாப்பில் செய்யவேண்டிய திருத்தம் இரண்டு தான்.
1) அரசியல் யாப்பின் உறுப்புரை 2 இலங்கை ஒரு ஒற்றையாட்சி என்று குறிப்பிடுகிறது. இலங்கை ஒற்றையாட்சி என்கிற உறுப்புரையை மாற்றி, இலங்கை ஒரு ஒன்றியங்களின் ஆட்சி என மாற்றி, சமஷ்டி ஆட்சிக்குரிய பண்புக்கு மாற்ற வேண்டிய தேவையுள்ளது.
2) அரசியல் யாப்பின் உறுப்புரை 76 பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை துறத்தலோ அல்லது பாராயனப்படுத்தலோ ஆகாது என்று சொல்லியுள்ளது.
பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை துறக்க தயார் இல்லை என்றால் மாகாணசபைகள் சுயாதீனமான சட்டத்தை இயற்ற முடியாது. ஆகவே 13கு வெளியேயும் திருத்தங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
13 உள் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றால், ஆளுநர்களுக்குரிய அதிகாரங்களை இல்லாமல் ஆக்கி, ஆளுநரை பெயரளவு நிருவாகி ஆக்கி, அதிகாரங்களை மாகாணசபைகளுக்கும், அமைச்சர்களுக்கும் அதிகாரங்களை வழங்க சூழலை உருவாக்க வேண்டும்.
மாகாணசபைகளுக்கு சட்டங்களை உருவாக்குவதில் பல தடைகள் உள்ளது, அதனை இல்லாமல்ச் செய்ய வேண்டும்.
அதனை விடவும் மிக முக்கியமாக வடகிழக்கு இணைப்பு என்பது தமிழர்களின் கூட்டிருப்பு, கூட்டுரிமை, கூட்டடையாளம் பேணுவது அவசியம்.
ஆகவே 13 உள்ள நான்கு மாற்றங்களும், 13கு வெளியே அரசியல் யாப்பில் இரண்டு திருத்தங்களையும் செய்து விட்டாலே 13 ஒரு சமஷ்டி ஆட்சி முறை மாதிரியாக வரும்.
இந்தியா 13ள் நிற்க விரும்பினால், இப்படியான மாற்றங்களைச் செய்ய நாம் அழுத்தங்களை கொடுக்கலாமா என்று யோசிக்க வேண்டியுள்ளது.
ஆகவே இந்த தீர்வு யோசனையை மிக கவனமாக தமிழர் தரப்பு அனுக வேண்டும் என்பது எங்களது அபிப்பிராயம். நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் தமிழர் தரப்பு தமது யோசனையை கூறிவிட்டு பேசாமல் இருக்க வேண்டும், பட்டிமன்ற விவாத்த்துக்குப் போகக் கூடாது. தமது தரப்பு தீர்மானத்தை கூறிவிட்டு வந்துவிட வேண்டும்.
தொடர்ந்து பேச்சுக்கு போக கூடாது, அவ்வாறு தொடர்ந்து பேசுவதாக இருந்தால் இம் முறை தீர்மானம் இது தான், அடுத்த முறைக்கு நாம் கூடி ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.
தொடர்ந்து பேசுவதாக இருந்தால் அரச தரப்பும், தமிழ் தேசிய தரப்பும் மட்டும் தான் பேச வேண்டும். பேசுவதாக இருந்தால் கட்டம் கட்டமாகத் தான் பேச வேண்டும்.
அதிலும் முதலில் அரசு நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டிய போரிக்கைகளைத் தான் முன் வைக்க வேண்டும்.
ஏனெனில் அரசு தொடர்பில் நம்பிக்கையில்லை, அரசு அரசில்த் தீர்வு தரும், தமிழ் மக்களுடன் ஒரு நல்லெண்ணத்துடன் தயாராக இருக்கும் என்பதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு நம்பிக்கை வரக்கூடியதாக அரசு செயற்ப்பட வேண்டும். நல்லெண்ணத்தைக் காட்ட அரசியல்க் கைதிகளின் பிரசினை, காணிப் பிரசினை, வலிந்து காணாமல்ப் மோனோர் விவகாரம் , தொல்லியத் திணைக்களத்தின் பிரசினை என்பனவற்றில் நல்லெண்ணத்தை காட்ட வேண்டும்.
ஆகவே நாங்கள் ஒரு நல்லெண்ணப் பொதியை வைக்கலாம் முதலில் இதில் நல்லிணக்கத்தைக் காட்டுமாறு வலியுறுத்த வேண்டும்.
இரண்டாம் கட்டத்தில் கொள்கை ரீதியான உடன்பாட்டுக்கு வர வேண்டும், சமஷ்டியை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லையா?
சமஷ்டியை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும், தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும், அவர்களது இறைமையை அங்கீகரிக்க வேண்டும், அவர்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் அதனை நடைமுறைப்படுத்துவற்கான ஆட்சிப் பொறி முறையாக சமஷ்டியை ஏற்றுக் கொள்ள வேணும்.
அதனை ஏற்றுக் கொண்டு அரசுக்கும் , தமிழ்த் தரப்புக்குமிடைநில் ஒரு எழுத்து மூலமான உடப்படிக்கை செய்து கொள்ளப்பட வேண்டும்.
மூன்றாம் கட்டத்தில் சமஷ்டி எப்படி இருக்க வேணும் அதற்குள் என்ன என்ன விடயங்களை சேரக்க வேணும் என்கிற உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தாம் நாம் ஒரு வலுவான அரசியல்த் தீர்வை நோக்கி நகரக்கூடியதாக இருக்கம். இதில் வலு கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் வரலாறு எமக்குத் தந்த மிகப் பெரிய சந்தர்ப்பம். இன்று தமிழ் மக்களின் பிரசினைகளைத் தீர்க்காமல் இந்த அரசினால் ஒரு போதும் பொருளாதாரப் பிரசினையை தீர்க் முடியாது. இது தான் இன்றை கள யதார்த்தம்.