12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சுமார் 12,000 அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களில் சுமார் 12,000 பேரின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் ஓய்வூதியத் துறைக்கு அனுப்பப்படவில்லை என தெரியவருகிறது.

இவர்களில் சிலர் தொடர்ந்தும் பணிபுரிய எதிர்பார்த்துள்ளதாகவும், அதனால் தான் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டு ஓய்வுபெறும் எந்தவொரு அரச ஊழியரினதும் சேவைக் காலம் நீடிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஓய்வூதிய விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்துவதால் ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம், ஓய்வு பெற்ற சுமார் இருபதாயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு இம்முறை ஓய்வு பெறும் நபர்களுடன், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் ஊடகமொன்றுக்கு கூறுகையில், இந்த வருடத்திற்குள் மாத்திரம் சுமார் 1800 கோடி ரூபா ஓய்வூதிய கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews