மேல் மாகாணத்தில் வன விலங்குகள் மனிதர்களின் வீடுகளுக்கு வரும் போக்கு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மேல்மாகாணத்தில் அதிகரித்த நகரமயமாதல் காரணமாக விலங்குகளின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.
மேலும், குறிப்பிட்ட நபர்கள் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து அகற்றியதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால், மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குரங்குகள், நரிகள், மரநாய் உள்ளிட்ட விலங்குகள் நகர்ப்புறங்களுக்கு ஈர்க்கப்பட்டுள்ளமை அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அங்கு விலங்குகள் பல்வேறு விபத்துகளுக்கு உள்ளாகி வருவதுடன், உயிருக்கு அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளது.
விபத்து காரணமாக பெல்லன்வில அத்திடிய வனவிலங்கு புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான வன விலங்குகள் யால பூங்காவிற்குள் விடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உலர் வலயத்தில் காட்டு யானைகள் பெரும்பாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
அதன்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டு யானைகளின் இறப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 375 காட்டு யானைகள் மனித நடமாட்டம் மற்றும் பல்வேறு விபத்துகளால் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு 402 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.