நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படும் நிலையில் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்த தீர்வு என சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் குளிர் மற்றும் தூசி நிலை காரணமாக மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்,சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்புளுவன்ஸா போன்ற நோய்கள் இந்நாட்களில் பரவலாகக் காணப்படுகின்றமையினால் மாணவர்கள் சில வாரங்களுக்கு முகக்கவசம் அணிந்து பாட சாலைக்குச் செல்வது சிறந்தது.
எனவே குழந்தைகளுக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அவர்களை பெற்றோர் வீட்டிலேயே வைத்திருக்குமாறும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை,நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண் 101 முதல் 150 வரையில் பதிவாகியுள்ளதுடன், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினருக்கு ஆரோக்கியமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் இதனால் முககவசத்தை அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.