
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் நேற்று நடைபெற்றது.

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈகைச்சுடரினை கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் தவபாலன் ஏற்ற மலர் மாலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தினர்.
குறித்த நிகழ்வில் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ்மக்களின் சுதந்திரபோராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்
தாயகத்தில் போர் உக்கிரம்பெற்ற காலகட்டப்பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த்த முடியாத சூழலிலும் உடல்நலத்தினை கருத்தில் கொள்ளாது பன்னாட்டிற்கு சென்று தமிழ்மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துகூறியவரே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஆவார் என சிறிதரன் தெரிவித்துள்ளார்.



