
மன்னார் – மாந்தை மேற்கு மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 300000 ரூபா அத்தியவசியமான உணவுப் பொருள்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ராணி மைந்தன் குமரன் நற்பணி மன்றத்தின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட அடம்பன்தாழ்வு, பரப்புக்கடந்தான், காத்தான்குளம், பரப்பாங்கண்டல், வட்டக்கண்டல், ஆலங்குளம் ஆகிய பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கே இவ்வாறு அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் உதவியை காத்தான்குளம் கிராமசேவையாளர் பிரிவில் தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், மற்றும் தொண்டர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் மதகுருமார்களும், பயனாளிகள் என பலரும் பங்குகொண்டனர்.



