கடந்த இரண்டு வருடகாலமாக இருந்து வந்த யுத்தத்தினால் 35 வருடங்களாக இடம்பெயர்து வாழ்ந்து வந்த பொத்துவில் கனர் கிராம மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு 76 பேருக்கு காணி வழங்கும் பணி ஆரம்பித்து வைக்கப்படுவது அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆரம்ப புள்ளியாகும். என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச செயலகத்தில் யுத்தத்தினால் இடம்பெயாந்த 76 பேருக்கு பொத்துவில் பிரதேச செயலாளர் தலைமையில் நேற்று புதன்கிழமை (14) காணி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த கனகர் கிராமத்தில் 165 குடும்பங்கள் வாழ்ந்துவந்துள்ளதாக வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டு வாழ்ந்து வந்ததுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்த கிராம மக்கள் பல தடவை இடம்பெயர்ந்து வந்துள்ளனர்
இவர்கள் யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் இதுவரை இந்த மக்கள் மீள்குடியேற முடியாத நிலையில் அவர்கள் தம்மை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறுமாறு கடந்த 2 வருடங்களாக உண்ணா விரத போராட்டத்ல் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களை மீள்குடியேற்ற நான் உட்பட பலர் பல முயற்சிகளை எடுத்த நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான வீரசிங்க இந்த மக்களை குடியமர்த்த கூடுதலான பங்களிப்பை செய்துவந்தார்.
இந்த நிலையில் குடியமர்துவதற்கான அனுமதி கிடைத்த நிலையில் கிராமசேவகர் காணி உத்தியோகத்தர்கள் தொடர்சியான நடவடிக்கையில் முதற்கட்டாக 76 பேரை இனங்கண்டு இவர்களுக்கு முதலில் ஒரு ஏக்கர் வயல் நிலமும் குடியிருக்க 20 பேச் காணியும் வழங்க தீர்மானித்து அதனை இன்று குழுக்கல் முறையில் காணி தேர்தெடுக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பதுடன்
இந்த குழுக்கல் நிலையில் தேர்தெடுக்கப்பட்டவர்களின் காணிகள் நில அளவையாளர்களால் அளந்து அடையாப்படுத்திய பின்னர் அவர்களுக்கான பத்திரம் வழங்கப்படும்.
எனவே இந்த நீண்கால பிரச்சனைக்கு முதலில் தீர்வு கண்டுள்ளோம் அத்தோடு நாட்டிலே இருக்கின்ற மூவின மக்களும் இணைந்துவாழுகின்ற அடிக்கல்லாக இந்த காணி வழங்கும்; திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளளது இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பிர்களான வீரசிங்க, முசாரப், காணி அமைச்சர் வனபரிபாலனசபை பிரதேச செயலாளர் உட்பட அனைவருக்கு நன்றிகள் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான வீரசிங்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.