
முல்லைத்தீவு – விசுவமடு மகாவித்தியாலயத்தில் தொடர் களவில் ஈடுபட்டிருந்த கும்பலை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் தொடர்ச்சியாக மின்மோட்டார் உட்பட பல பொருட்கள் காணாமல் போயுள்ளது.
குறித்த களவு சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் வாழும் சில போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து களவாடப் பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக் குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்