நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கொண்டு நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அறியும் வகையில் நடத்தப்பட்ட இளைஞர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
எங்களிடம் பணமில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை. தந்திரோபாயங்கள் மூலம் அதைக் கட்டியெழுப்புவதுதான் ஒரே வழி.
அரசால் வேறு எதுவும் செய்ய முடியாது. நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தொடர்ந்து கொண்டு நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளோம்.
மேலும் இங்கு சுமார் 03 பில்லியன் டொலர்கள் உள்ளன. எனவே எங்கள் திட்டத்தின் மூலம் ரூபாவும் வலுவடையும் என குறிப்பிட்டுள்ளார்.