இலங்கையில் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் 90% க்கும் அதிகமாக இருந்த நீர்மட்டம் தற்போது 75% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூறுகிறது.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 70% ஆகக் குறைந்தால் மின்சார விநியோகம் நெருக்கடியாகிவிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் மின்வெட்டு காலத்தை அதிகரிக்க வேண்டிவரும் என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.