மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக 140 பேருடன் வந்த அகதிகள் கப்பல் வடமராட்சி கிழக்கு உடுத்துறைக்கு கடற்பகுதிலில் கடற்படையால் இடைமறிக்கப்பட்டு அங்கு விசாரணை நடாத்தப்பட்டு தற்போது கடற்படையின் இரண்டு டோறா படகுகள் அகதிகள் படகிற்கு பாதுகாப்பு வளங்கிய வண்ணம் அதனை கட்டி இழுத்துக்கொண்டு காங்கேசன்துறை நோக்கு கொண்டு செல்வதாகவும் தற்போது குறித்த பயணிகள் கப்பல் நாகர்கோவில் கடற்பரப்பில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவர்கள் உட்பட 140 பேர் குறித்த படகில் இருப்பதாகவும் படகு நங்கூரமிடப்பட்டு அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே குறித்த படகு கட்டியிழுக்கப்பட்டு காங்கேசன் துறை நோக்கி கொண்டுவரப்படுகிறது.