பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து பாடசாலைகள் மற்றும் அருகிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு ஒரு முறை சோதனை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்காக புலனாய்வு பிரிவினர் மற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாரத்திற்கு ஒருமுறை ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெற்றோர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்களால் பாடசாலைகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.