தென் கிழக்கு வங்க கடலில் இடியுடன் கூடிய கன மழையுடன் காற்று… வீசும்,,,மட்டுமாவட்ட பணிப்பாள ரமேஷ அறிவிப்பு!!

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்ததால் பகுதி அதே பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இது மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலை அடையக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது

நாட்டை சூழவுள்ள பகுதிகளில் மழையே அல்லது இடியுடன் கூடிய மழைபெய்ய கூடும் நாட்டில் சூழவுள்ள கடற்பரப்புக்களில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமானது 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும்

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டைவரையிலான கடற்பரப்புக்களிலும் காங்கேசன்துறையில் இருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்புவரையான கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 55 வீதம்வரை அதிகரித்து வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புக்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் ஓரளவிற்கு கொந்தளிப்பாக காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் பலத்த காற்றும் வீசக்கூடும்.

தென் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மழையே அல்லது இடியுடன் கூடிய மழையே பெய்யக்கூடும் எனவே மேற்படி கடற் பரப்புக்களில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும் மீனவர் சமூகங்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இது தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிப்புக்கள் சம்மந்தமாக அவதானமாக செயற்படுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்

இந்த காற்றழுத்ததாழ் பகுதி காரணமாக கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் இப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி லீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டை சூழவுள்ள ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையே அல்லது இடியுடன் கூடிய மழையே பெய்யக் கூடும் நாட்டை சூழவுள்ள  சில பிரதேசங்களில் 75 மில்லி லீற்றருக்கு அதிகமான கனமழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும் அதேNளை மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews